Wednesday, 6 August 2014

நமது கல்லூரி முதல்வர் தமிழறிஞர் முனைவர் மு.அருணகிரி அவர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா 05.08.14



நமது கல்லூரி முதல்வர் தமிழறிஞர் முனைவர் மு.அருணகிரி 
அவர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா 05.08.14



தமிழிசைச் சங்கம் சார்பில், ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் பொற்கிழி, தமிழறிஞர் மு.அருணகிரிக்கு வழங்கப்பட்டது. மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் தமிழிசைச் சங்கம் சார்பில் டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியாரின் 110 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், மதுரை ஆயிரவைசியர் கல்லூரி முதல்வரும் தமிழறிஞருமான மு.அருணகிரிக்கு பொற்கிழி விருதை மதுரை மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன். அதற்கான பாராட்டுப் பத்திரத்தை தமிழிசைச் சங்க அறங்காவலர் எஸ்.மோகன்காந்தி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மு.அருணகிரி பேசியது:







பொற்கிழி வழங்கி தமிழறிஞர்களை ராஜா சர் முத்தையா செட்டியார் குடும்பம் ஊக்கப்படுத்துகிறது. அண்ணாமலை செட்டியார், அழகப்பச் செட்டியார், கருத்துமுத்து தியாகராச செட்டியார் ஆகியோரின் குடும்பங்கள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலம் தமிழை வளர்க்க பெரும் உதவி புரிந்துள்ளன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழறிஞர்களைப் பணியமர்த்தியவர் ராஜா சர் முத்தையா செட்டியார். தமிழிசையைப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக தமிழிசைச் சங்கத்தை அவர் தொடங்கினார். இசையுடன் படித்தால் தாய்மொழியை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதில் உறுதியாக இருந்தவர். ராமாயணத்தை கற்றுக் கொள்ளச் சென்றபோது தடுக்கப்பட்ட குயவர் இன பெண், எளிய நடையில் தெலுங்கு மொழியில் ராமாயணத்தை படைத்தார். தமிழ் மொழியை எழுதும்போது உரக்கச்சொல்லிப் படிக்கும் வழக்கம் கொண்டவர் உ.வே.சா. அவரது இந்தச் செயல் பலரை தமிழின் பால் ஈர்த்தது. இது போன்ற விஷயங்கள் ராஜா சர் முத்தையா செட்டியாருக்கு தமிழை வளர்க்க உந்துதலாக இருந்தன என்றார்.

விழாவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா, உலகத் திருக்குறள் பேரவை நிறுவனர் மணிமொழியன், தமிழறிஞர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நன்றி :தினமணி நாளிதழ்


Wednesday, 2 July 2014

முதலாமாண்டு மாணவ மாணவியர் அறிமுக விழா மற்றும் ஆற்றுப்படுத்தும் பயிற்சி 2014-2015 .

முதலாமாண்டு மாணவ மாணவியர் அறிமுக விழா மற்றும் ஆற்றுப்படுத்தும் பயிற்சி 2014-2015 .

கல்லூரி அரங்கத்தில் 02.07.2014 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது .பேராசிரியர் C.சிவகாம வைதேகி வரவேற்புரை நிகழ்த்தினார் .பேராசிரியர் T.S.முருகன் துறை தலைவர்களை அறிமுகப்படுத்தினார் விழாவில் கல்லூரி செயலர் திரு S.M ஜெயராமன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் மு.அருணகிரி, அவர்கள் மாணவ மாணவியருக்கு கல்லூரி பற்றியும் மாணவ மாணவியரின் கடமைகள் பற்றியும் எடுத்துரைத்தனர் .Dean பேராசிரியர் A.பிரபாகரன் நன்றி கூறினார் .கல்லூரி ஆட்சி மன்ற குழுவினர் பேராசிரியர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர் .




Tuesday, 1 July 2014

முதலாமாண்டு மாணவ மாணவியர் அறிமுக விழா மற்றும் ஆற்றுப்படுத்தும் பயிற்சி 2014-2015 .

முதலாமாண்டு மாணவ மாணவியர் அறிமுக விழா மற்றும் ஆற்றுப்படுத்தும் பயிற்சி 2014-2015 .

கல்லூரி அரங்கத்தில் 02.07.2014 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் விழாவில் கல்லூரி செயலர் திரு S.M ஜெயராமன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் மு.அருணகிரி, கல்லூரி ஆட்சி மன்ற குழுவினர் கலந்து கொள்கின்றனர் .அனைவரும் வருக

Monday, 16 June 2014

கல்லூரி 19.06.2014 அன்று திறக்கப்படும்

இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவியருக்கு கல்லூரி 19.06.2014 அன்று திறக்கப்படும்

Thursday, 8 May 2014

அனைத்து பாட பிரிவுகளுக்கும் சேர்க்கை நடை பெறுகிறது

+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரை SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரி வாழ்த்துகிறது வாழ்க்கையில் மென்மேலும் உயர வாழ்த்துகிறோம்
அனைத்து பாட பிரிவுகளுக்கும் சேர்க்கை நடை பெறுகிறது .உடன் அணுகவும்

UG Courses
-------------
B.Sc., Bio Chemistry
B.Sc., Physics
B.Sc., Maths(Computer Application)
B.Sc., Computer Science
B.B.A
B.A., English
B.Sc., Electronics & Communication
B.Sc., Information Technology
B.Com
B.Com., Computer Application
P.G.Course
-----------
M.Sc Maths
For admission contact
1.The Principal
SLS MAVMM Asia Vaisyar College .
Kallampatti, M.chatrapatti(po)
Madurai -625014

Ph.0452-2094942,2095542
97509 55594
City office
17,EAST MARET ST
Madurai -1
Ph.0452-2321742,2322503
975009 55592

Saturday, 12 April 2014

பல்கலைக்கழக தேர்வுகள் ஏப்ரல் 28 -2014



அனைத்து பாட பிரிவுகளுக்கும் பல்கலைக்கழக தேர்வுகள் ஏப்ரல் 28 -2014 அன்று துவங்குகிறது ..

Wednesday, 19 March 2014

SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா



SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா 16.03.2014 அன்று நடைபெற்றது . MAVMM சபையின் தலைவர் திரு N.பாஸ்கரன்(VKP) பட்டமளிப்பு விழாவினை துவக்கி வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார் .மதுரை காமராஜர் பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் P.விஜயன் M.A.,M.phil.,ph.D., அவர்கள் சுமார் 268 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். கல்லூரி செயலர் திரு S.M.ஜெயராமன் அவர்கள் நன்றி கூறினார் .
விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் மு.அருணகிரி ,கல்வி ஆலோசகர் முனைவர் N.S. பாலசுப்ரமணியன் மற்றும் பேராசிரியர்கள்,அலுவலக பணியாளார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  





Monday, 17 March 2014

SLS MAVMM ஆயிர வைசியர் கல்லூரியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா



SLS MAVMM ஆயிர வைசியர் கல்லூரியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா 16.03.2014 அன்று நடைபெற்றது . MAVMM சபை தலைவர் திரு N.பாஸ்கரன் (VKP) அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார் .செயலர் திரு S.M ஜெயராமன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு.அருணகிரி அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார் . மனிததேனீ திரு ரா.சொக்கலிங்கம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து MMAVMM  சபை நிர்வாகிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.நிறைவாக .கல்லூரியின் DEAN A.பிரபாகரன் நன்றி கூறினார் . விழாவில் பேராசிரியர்கள் ,பெற்றோர்கள் , மாணவ மாணவிகள், பத்திரிக்கை நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்





Friday, 14 March 2014

SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியின் விளையாட்டு விழா & கல்லூரி நாள் விழா





SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியின் விளையாட்டு விழா & கல்லூரி நாள் விழா வரும் 16.03.2014 ஞாயிறு மாலை 4.15 மணிக்கு பாலசுப்ரமணியம் – பார்த்திபன் எம்ஏவிஎம்எம் மாளிகை ,சன்னதி தெரு ,திருப்பரங்குன்றம் மதுரை -5 என்ற முகவரியில் நடைபெறும். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.