Wednesday, 19 March 2014

SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா



SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா 16.03.2014 அன்று நடைபெற்றது . MAVMM சபையின் தலைவர் திரு N.பாஸ்கரன்(VKP) பட்டமளிப்பு விழாவினை துவக்கி வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார் .மதுரை காமராஜர் பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் P.விஜயன் M.A.,M.phil.,ph.D., அவர்கள் சுமார் 268 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். கல்லூரி செயலர் திரு S.M.ஜெயராமன் அவர்கள் நன்றி கூறினார் .
விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் மு.அருணகிரி ,கல்வி ஆலோசகர் முனைவர் N.S. பாலசுப்ரமணியன் மற்றும் பேராசிரியர்கள்,அலுவலக பணியாளார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  





Monday, 17 March 2014

SLS MAVMM ஆயிர வைசியர் கல்லூரியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா



SLS MAVMM ஆயிர வைசியர் கல்லூரியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா 16.03.2014 அன்று நடைபெற்றது . MAVMM சபை தலைவர் திரு N.பாஸ்கரன் (VKP) அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார் .செயலர் திரு S.M ஜெயராமன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு.அருணகிரி அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார் . மனிததேனீ திரு ரா.சொக்கலிங்கம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து MMAVMM  சபை நிர்வாகிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.நிறைவாக .கல்லூரியின் DEAN A.பிரபாகரன் நன்றி கூறினார் . விழாவில் பேராசிரியர்கள் ,பெற்றோர்கள் , மாணவ மாணவிகள், பத்திரிக்கை நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்





Friday, 14 March 2014

SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியின் விளையாட்டு விழா & கல்லூரி நாள் விழா





SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியின் விளையாட்டு விழா & கல்லூரி நாள் விழா வரும் 16.03.2014 ஞாயிறு மாலை 4.15 மணிக்கு பாலசுப்ரமணியம் – பார்த்திபன் எம்ஏவிஎம்எம் மாளிகை ,சன்னதி தெரு ,திருப்பரங்குன்றம் மதுரை -5 என்ற முகவரியில் நடைபெறும். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Wednesday, 12 March 2014

SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா



SLS MAVMMஆயிர வைஸ்யர்கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா வரும் 16.03.2014 அன்று காலை 10.00 மணியளவில் மதுரை திருப்பரங்குன்றம் MR.Balasubramanian, MR.Parthiban MAVMMThiruparangundram Maligai, sanathi street, Thiruparangundram Madurai-625005 என்ற முகவரியில் நடைபெறுகிறது. 



SLS MAVMM ஆயிர வைஸ்யர்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் --பரிசு பெற்றனர்



கோவை    Sri Venkateswara  College ல்   07.03.2014      அன்று       அனைத்து கல்லூரிகளுக்கு இடையே நடந்த சுமார் 180 கல்லூரிகளுக்கு மேல் கலந்து கொண்ட  பல்வேறு   போட்டிகளில்   SLS MAVMM ஆயிர    வைஸ்யர் கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு B.Sc IT படிக்கும் T..Dinesh ‘Face Painting’ போட்டியில் முதல் பரிசாக ரொக்க பணம் ரூபாய் 1500 பரிசாக வென்றார் . மூன்றாம் ஆண்டு B.Sc Bio-chemistry படிக்கும் R.Panchatcharam  ‘soap carving’  போட்டியில் முதல் பரிசாக ரொக்க பணம் ரூபாய் 2000 பரிசாக வென்றார் .
பரிசுகளை  திரைப்பட பின்னணி பாடகி சின்மயி அவர்கள் வழங்கினார்.
பரிசுகளை  வென்ற மாணவர்களுக்கு முதல்வர் ,செயலாளர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்